Connect with us

Raj News Tamil

லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

சினிமா

லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவா் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்திற்கு பிறகு, வை ராஜா வை என்ற படத்தை இயக்கிய இவர், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னணி பணிகள் முடிவடையாத காரணத்தால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி , படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top