Connect with us

Raj News Tamil

பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த லியோ படக்குழு! உண்மையான வசூல் இதுதான்!

சினிமா

பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த லியோ படக்குழு! உண்மையான வசூல் இதுதான்!

விஜயின் லியோ திரைப்படம், கடந்த 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களையே தொடர்ந்து பெற்று வந்தது.

இருப்பினும், தொடர் விடுமுறை காரணமாக, படத்தின் வசூல் பாதிப்பு அடையவில்லை. இதற்கிடையே, இப்படம் 500 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது என்று, ரசிகர்கள் பலரும் இணையத்தில் கூறி வந்தனர்.

ஆனால், இந்த பதிவை பார்த்த மற்ற சினிமா ரசிகர்கள், இது உண்மையாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே கூறி வந்தனர்.

இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது லியோ படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, லியோ திரைப்படம், 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரசிகர்களின் காரசார விவாதம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

More in சினிமா

To Top