Connect with us

Raj News Tamil

தமிழில் 2-வது படம்.. லியோ படைத்த இன்னொரு சாதனை.. எகிறும் எதிர்பார்ப்பு..

சினிமா

தமிழில் 2-வது படம்.. லியோ படைத்த இன்னொரு சாதனை.. எகிறும் எதிர்பார்ப்பு..

விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

ரிலீஸ்-க்கு முன்பே இந்த திரைப்படம், வசூலில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் தற்போது, இன்னொரு சாதனை ஒன்றையும் செய்துள்ளதாம்.

அதாவது, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு வெளியாக உள்ள இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையை, இப்படம் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு, மணிரத்னம் இயக்கியிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தான், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்தது.

பெரிய திரை, துல்லியமான காட்சிகள், சிறப்பான ஒலி-ஒளி அமைப்பு ஆகிய அம்சங்கள், ஐமேக்ஸ் திரையரங்குகளில் இடம்பெற்றிருக்கும்.

பெரும்பாலும், பிரம்மாண்டமான முறையில் உருவாகும் ஹாலிவுட் படங்கள், இந்த வகையிலான தொழில்நுட்பத்திலேயே உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top