Connect with us

Raj News Tamil

ஊழல் ஒழிப்புப் பிரிவிற்கு மம்தா பானார்ஜி எதிர்ப்பு!

இந்தியா

ஊழல் ஒழிப்புப் பிரிவிற்கு மம்தா பானார்ஜி எதிர்ப்பு!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று ஆளுநர் மாளிகையில் ஊழல் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. இதில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான புகார்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வா் மம்தா பானா்ஜி கூறியதாவது: ஊழல் ஒழிப்புப் பிரிவு என்று ஒன்றை ஆளுநா் உருவாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது ஆளுநா் மாளிகையின் வேலையல்ல. நாங்கள் ஆளுநா் மீது மரியாதை வைத்துள்ளோம். அதே நேரத்தில் அவா் தன்னிச்சையாக ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இது மாநில அரசின் நிர்வாகத்திலும், உரிமையிலும் தேவையில்லாமல் தலையிடும் செயலாகும்.

ஆளுநா் என்ற முகமூடியை அணிந்து கொண்டு பாஜகவின் உத்தரவுகளுக்கு இணங்க செயல்படுவதை ஏற்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும், தனது சொந்த மாநிலமான கேரளத்தில் இருந்து ஒருவரை மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநா் ஆனந்த போஸ் நியமித்துள்ளார். அவருக்கு கல்வித் துறையில் எந்த அனுபவமும் இல்லை என்றார் மம்தா பானா்ஜி.

More in இந்தியா

To Top