Connect with us

Raj News Tamil

தெலுங்கு மொழியில் ரீமேக் ஆகும் யோகி பாபுவின் சூப்பர் ஹிட் படம்!

சினிமா

தெலுங்கு மொழியில் ரீமேக் ஆகும் யோகி பாபுவின் சூப்பர் ஹிட் படம்!

யோகிபாபு நடிப்பில், மடோன் அஸ்வீன் இயக்கத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று, வெளியான திரைப்படம் மண்டேலா.

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டுமின்றி, இந்த படத்திற்காக, சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில், தேசிய விருதையும் மடோன் அஸ்வீன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்த திரைப்படம், மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரில், தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

சம்பூர்ணேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தை, அறிமுக இயக்குநர் புஜா கொல்லுரு என்பவர் இயக்கியுள்ளார்.

வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.

More in சினிமா

To Top