Connect with us

Raj News Tamil

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சினிமா

மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அந்தாதூன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். இவர், விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோரை வைத்து, மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை எடுத்திருந்தார்.

கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அன்று வெளியான இந்த திரைப்படம், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும், ஒருசில காரணங்களால் வசூலில் பாதிப்பு அடைந்த இப்படம், தோல்வி படமாக மாறியது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மார்ச் 8-ஆம் தேதி அன்று, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாம்.

More in சினிமா

To Top