Connect with us

Raj News Tamil

சூர்யா தவறவிட்ட விஜயின் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம்..

சினிமா

சூர்யா தவறவிட்ட விஜயின் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம்..

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. பொதுவாக மற்ற நடிகர்கள் நடிக்க முடியாமல் போன திரைப்படங்களில் நடித்து, அதனை ஹிட் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதாவது, கஜினி, நந்தா, பிதாமகன் போன்ற படங்களில், முதலில் வேறொரு ஹீரோக நடிக்க இருந்தார்.

அதன்பிறகு, சூர்யா நடித்து, அந்த படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால், இந்த முறை ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் ஒன்றின் வாய்ப்பை, சூர்யா தவறவிட்டுள்ளார்.

அதாவது, ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிப்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நண்பன். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், விஜய்-க்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படத்தில், முதன்முதலில் சூர்யாவை நடிக்க வைப்பதற்கு தான் ஷங்கர் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், சில காரணங்களால், அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

More in சினிமா

To Top