சினிமா
வசூலில் சாதனை படைக்கும் பதான்..3 நாளில் எத்தனை கோடி தெரியுமா?
ஷாருக் கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் பெருநகரங்களான டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது.
படம் திரையிடப்பட்ட முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஷாருக் கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாமின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈடடிய படம் என்ற சாதனையை பதான் படைத்து உள்ளது.
இந்நிலையில், பதான் படம் இந்தியாவில் 3 நாளில் ரூ.150 கோடி வசூலித்து உள்ளது. உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது.
You must be logged in to post a comment Login