Connect with us

Raj News Tamil

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழகம்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் கடந்த 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் “செரியபானி” பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

நாகையில் இருந்து சுமார் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். ஒரு பயணி 50 கிலோ வரை பொருட்களை தங்களுடன் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து இலங்கை செல்ல ரூ. 6.500 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி சோ்த்து ஒரு நபருக்கு ரூ. 7.670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்துக்குள் வரும் நபா்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். ஏற்கெனவே இரண்டு முறை கப்பல் போக்குவரத்து சேவைக்கான தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே சனிக்கிழமை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top