Connect with us

Raj News Tamil

ரிங்கு சிங்-ஐ வித்தியாசமான முறையில் பாராட்டிய ஆபாச பட நடிகை!

உலகம்

ரிங்கு சிங்-ஐ வித்தியாசமான முறையில் பாராட்டிய ஆபாச பட நடிகை!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்தது. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ், 204 ரன்கள் எடுத்திருந்தது. 205 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது.

இருப்பினும், கடைசி ஓவரில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. இதில், அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங், 5 பந்துகளுக்கு 5 சிக்சர் அடித்து, அபார வெற்றி பெற்றார். ஒரே நாள் இரவில் நாடு முழுவதும் ஹீரோவான ரிங்கு சிங்-ஐ பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை கேந்தரா லஸ்ட் என்பவரும், ரிங்கு சிங்கிற்கு தனது வித்தியாசமான பாராட்டை தெரிவித்துள்ளார். அதாவது, தன்னுடைய போட்டோவையும், ரிங்கு சிங்கின் போட்டோவையும் இணைத்து எடிட் செய்து, ரிங்கு ஒரு கிங் என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top