Connect with us

Raj News Tamil

பலமடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா! ஆடிப்போன திரையுலகம்!

சினிமா

பலமடங்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா! ஆடிப்போன திரையுலகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் என்ற திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. இதனால், சமந்தாவின் மார்கெட் குறையும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.

ஆனால், அதற்கு நேர் மாறாக, தற்போது ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது, பேமிலி மேன் 1, பேமிலி மேன் 2, ஃபார்ஸி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் மற்றும் டி.கே, தற்போது சிட்டாடல் என்ற இன்னொரு வெப் சீரிஸை இயக்க உள்ளனர்.

இதில், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், நடிகை சமந்தா நடிக்க உள்ளார். இதுவரை 4 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று வந்த சமந்தா, இந்த வெப் சீரிஸ்-க்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம். மார்கெட் குறைந்துவிடும் என்று சினிமா தரப்பினருக்கு, இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top