Connect with us
Raj News Tamil

Raj News Tamil

#BREAKING || “பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்” – அரசு அதிரடி அறிவிப்பு! எந்த வகுப்புக்கு எந்த தேதியில் பள்ளிகள் திறப்பு?

தமிழகம்

#BREAKING || “பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்” – அரசு அதிரடி அறிவிப்பு! எந்த வகுப்புக்கு எந்த தேதியில் பள்ளிகள் திறப்பு?

பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு, கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, மே மாதம் முழுவதும், கோடை விடுமுறை விடுக்கப்பட்டது. அதன்பிறகு, ஜூன் 1-ஆம் தேதி அன்று, பள்ளி திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிகப்படியான வெயில் காரணமாக, பள்ளிகள் திறக்கும் தேதியை, ஜூன் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த ஆலோசனையின் இறுதியில், பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றுவதற்கு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1-ல் இருந்து 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் 14-ஆம் தேதியும், 6-ல் இருந்து 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் 12-ஆம் தேதியும், பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top