Connect with us

Raj News Tamil

ஆரம்பித்தது இந்தியன் 3 படப்பிடிப்பு.. ஷாக் தந்த ஷங்கர்..

சினிமா

ஆரம்பித்தது இந்தியன் 3 படப்பிடிப்பு.. ஷாக் தந்த ஷங்கர்..

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் ஷீட்டிங் அனைத்தும் முடிந்து, பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், இப்படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய 2 படத்தின் காட்சிகள் அதிகம் இருப்பதால், இந்த படத்தை இரண்டு பாகமாக வெளியிட ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு, கமல் ஹாசனும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, விசாகப்பட்டிணம், விஜயவாடா ஆகிய பகுதிகளில், இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் இன்னும் சில நாட்களில், படப்பிடிப்பில், கலந்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக, 40 நாட்கள் வரை, கமல் ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top