Connect with us

Raj News Tamil

கமலுக்கு வில்லனாக நடிக்கும் சிம்பு

சினிமா

கமலுக்கு வில்லனாக நடிக்கும் சிம்பு

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தை மையமாக கொண்டிருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதற்கிடையே இவர் சிம்புவின் 50-வது படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதில் புதிய ட்விஸ்ட் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதாவது, மணிரத்னம் தனது அடுத்த படத்தை நடிகர் கமலை வைத்து தான் இயக்க உள்ளாராம். அந்த படத்தில் தான் சிம்பு நடிக்க போவதாக கூறப்படுகிறது. அதுவும் கமலுக்கு வில்லனாக தான் நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவல் நெட்டிஸன்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top