Connect with us

Raj News Tamil

மோடியை வீழ்த்தக்கூடிய வல்லமை ஸ்டாலினுக்கு தான் உள்ளது – ஆ. ராசா பேட்டி

அரசியல்

மோடியை வீழ்த்தக்கூடிய வல்லமை ஸ்டாலினுக்கு தான் உள்ளது – ஆ. ராசா பேட்டி

திருச்சியில் திமுக பயிற்சி பாசறைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆ. ராசா பேசியதாவது: மோடி மாடலை வீழ்த்த பெரியாரின் திராவிட மாடல் தான் சரியான ஆயுதம். அது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.

இந்தியாவிலேயே மோடியை வீழ்த்தக்கூடிய வல்லமை நமது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது. இன்று இந்தியாவை பார்த்து உலகமே காரி துப்புகிறது. நம்ம ஊரில் எத்தனையோ ஜாதி வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏழை – பணக்காரன் பாகுபாடு இருக்கிறது.

ஜாதி வித்தியாசம் பார்ப்பவர் கூட, வேறொரு ஜாதி பெண்ணுக்கு ஒரு அநீதி நடக்கிறது என்றால் கேள்வி கேட்பார். ஏனென்றால் பெண் என்றால் பேயே இறங்கும். பெண்ணுக்கு கூட மோடி இறங்கவில்லை என்றால் பேயை விட மோசமானவரா மோடி என்ற கேள்வி எழுகிறது.

மோடி எனும் ஆரிய மாடலை பெரியாரின் திராவிட மாடலால் தான் வீழ்த்த முடியும். இவ்வாறு ஆ. ராசா பேசினார்.

More in அரசியல்

To Top