Connect with us

Raj News Tamil

தங்கலான் வாய்ப்பு முதலில் விக்ரமுக்கு இல்லையா? விட்டுக்கொடுத்த ஹீரோ!

சினிமா

தங்கலான் வாய்ப்பு முதலில் விக்ரமுக்கு இல்லையா? விட்டுக்கொடுத்த ஹீரோ!

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். வரும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது.

இந்த டீசர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் தொடர்பான சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் நடிப்பதற்கு முதன்முதலில் சூர்யாவுக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால், இந்த கதை விக்ரமுக்கு தான் நன்றாக இருக்கும். எனவே, அவரிடம் கதையை சொல்லுங்கள் என்று சூர்யா தான் விட்டுக் கொடுத்தாராம்.

சூர்யா சொன்னதை போலவே, தங்கலான் படத்தில் விக்ரமை விட சிறப்பாக வேறு யாராலும் நடிக்க முடியாது என்பதை, டீசரிலேயே அவர் நிரூபித்துள்ளார்.

More in சினிமா

To Top