Connect with us

Raj News Tamil

என்எல்சி சுரங்கம் நிறுத்தக் கோரி; தமிழக அரசிடம் கோரிக்கை எதுவும் வரவில்லை: மத்திய அமைச்சர்!

அரசியல்

என்எல்சி சுரங்கம் நிறுத்தக் கோரி; தமிழக அரசிடம் கோரிக்கை எதுவும் வரவில்லை: மத்திய அமைச்சர்!

என்எல்சி சுரங்க நீரை எடுத்துச் செல்லும் வகையில் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கப்பட்டது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் வாய்க்கால் வெட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்தியாதோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர். என்எல்சிக்கு இடம் கையகப்படுத்துவதை எதிர்த்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் என்எல்சி விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி எழுத்துபூா்வமாக அளித்து பதில் வருமாறு: நெய்வேலி பழுப்பு நிலக்கரி (இந்தியா) லிமி. நிறுவனம், கடந்த 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் இருந்து 25,900 ஹெக்டோ் பரப்பளவில் சுரங்க குத்தகையைப் பெற்றுள்ளது.

இந்த குத்தகை அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது. தற்போது, இந்தக் குத்தகை வருகின்ற 2036-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 3 -ஆம் கட்ட நிலக்கரி சுரங்கத் திட்டமும் குத்தகையின் ஒரு பகுதியாகும். இந்த 3 – ஆம் கட்ட சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை நிறுத்தக் கோரி, தமிழக அரசிடம் இருந்து இதுவரை கோரிக்கை எதுவும் வரவில்லை.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் 3 -வது கட்ட சுரங்கப் பணிகளை என்எல்சி இந்தியாவும் திரும்பப் பெறுவதற்கான எந்த முன்மொழிவையும் எடுக்கவில்லை.

அதே சமயத்தில் தமிழகத்தில் சேத்தியாத் தோப்பு (கிழக்கு), மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய மூன்று பழுப்பு நிலக்கரி தொகுதிகள், வணிக சுரங்கத்திற்கான ஏலத்தின் 7-ஆவது சுற்று ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏல செயல்முறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என இருவேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் பதிலளித்துள்ளார்.

More in அரசியல்

To Top