Connect with us

Raj News Tamil

தளபதி 67 டைட்டில் டீசர்! தெலுங்கு படத்தை மிஞ்சும் விஜய்!

சினிமா

தளபதி 67 டைட்டில் டீசர்! தெலுங்கு படத்தை மிஞ்சும் விஜய்!

தளபதி 67 படத்தின் அப்டேட், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனால், விஜயின் ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், தளபதி 67 படத்தின் டைட்டில் டீசர் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் டைட்டில் டீசரில், விஜய் 50 பேரை அடிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், அந்த சண்டை காட்சி முடிந்த பிறகு, விஜய் பஞ்ச் டயலாக் பேசுவாராம். இதேபோன்று, கத்தி படத்திலும் விஜய் 100 பேரை அடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அது படமாக்கப்பட்ட விதம், நம்பும் மாதிரியாக இருக்கும். அதேபோன்று தான், இதுவும் இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சிலர் இது தெலுங்கு பட சாயலில் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top