Connect with us

Raj News Tamil

விமானத்தில் இருந்து கீழே குதித்த பயணி! – அதிர்ச்சி சம்பவம்!

உலகம்

விமானத்தில் இருந்து கீழே குதித்த பயணி! – அதிர்ச்சி சம்பவம்!

கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்படும் நேரத்தில், பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை திறந்து 20 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இதனை கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, கீழே குதித்ததில் பலத்த காயமடைந்த பயணியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால், அந்த விமானம் 6 மணி நேரம் தாமதமாக கிளம்பியது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in உலகம்

To Top