Connect with us

Raj News Tamil

அஜித்திடம் தோல்வி அடைந்த அஜித்! விஜயிடம் தோல்வி அடைந்த விஜய்! காரணம் என்ன?

Trending

அஜித்திடம் தோல்வி அடைந்த அஜித்! விஜயிடம் தோல்வி அடைந்த விஜய்! காரணம் என்ன?

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் வலிமை. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக, முதல் நாளில் மட்டும் 36 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள துணிவு திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்றபோதிலும், வலிமை பட வசூலை முறியடிக்கவில்லை.

அதாவது, முதல் நாளில் மட்டும், இந்த படம் 21 கோடி ரூபாய் வரை தான் வசூலித்துள்ளது. ஆனால், இந்த நிலை வரும் நாட்களில் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம், அதிக எதிர்பார்ப்புகள் காரணமாக, 30 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள விஜயின் வாரிசு திரைப்படம், பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை காட்டிலும், குறைவாக தான் வசூலித்துள்ளது. வலிமை படத்தை விட துணிவும், பீஸ்ட் படத்தை விட வாரிசும், நல்ல விமர்சனங்களை பெற்றபோதிலும், இந்த இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால், அஜித், விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளதால், திரையரங்குகள் சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளது. முந்தைய படங்களை காட்டிலும், குறைவான திரையரங்குகள் கிடைத்துள்ளதே இதற்கு காரணம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top