Connect with us

Raj News Tamil

எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது- டிடிவி தினகரன்

அரசியல்

எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது- டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது.

தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர்கள் இணைந்தால் தி.மு.க.வை நிச்சயமாக வீழ்த்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top