Connect with us

Raj News Tamil

பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

சினிமா

பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

ஒரு காலத்தில் நல்ல திரைப்படங்களை தயாரித்து, பின்னாளில், ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்ட நிறைய தயாரிப்பாளர்கள், தமிழ் சினிமாவில் உள்ளனர்.

இவர்கள் தங்களது கடைசி காலங்களில், மருத்துவ உதவிக்கு கூட, பணம் இல்லாமல் வாழ்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

அந்த வகையில், தற்போது மருத்துவ உதவி சரியாக கிடைக்காமல், தவித்து வந்த பிரபல தயாரிப்பாளர், இன்று காலமாகியுள்ளார். அதாவது, பிதாமகன், கஜேந்திரா, லவ்லி, லூட்டி ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.

இவர், ரஜினி நடித்திருந்த பாபா திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை அறிந்த ரஜினி, சூர்யா உள்ளிட்ட ஒருசில நடிகர்களும், திரையுலக பிரபலங்களும், வி.ஏ.துரைக்கு உதவி செய்து வந்தனர்.

இருப்பினும், சிகிச்சை பலன் இன்றி, இன்று காலை அவர் காலமானார். இதனை அறிந்த திரையுலகினர் பலரும், அவருக்கு இரங்கல் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top