Connect with us

Raj News Tamil

சோகத்தில் ”வாரிசு படக்குழு” ..! காரணம் தெரியுமா..?

சினிமா

சோகத்தில் ”வாரிசு படக்குழு” ..! காரணம் தெரியுமா..?

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் ,வரும் 11 ஆம் தேதியன்று வெளியாகிறது. முன்னதாக படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஆகியவை வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் கலை இயக்குனராக பணியாற்றிய சுனில் பாபு, நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த எம்.எஸ். தோனி, சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது மறைவிற்கு திரைத்துறையினர், பொதுமக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top