Connect with us

Raj News Tamil

சத்தியத்தை மீறிய வெற்றிமாறன்! இப்படி பண்ணிட்டாரு?

சினிமா

சத்தியத்தை மீறிய வெற்றிமாறன்! இப்படி பண்ணிட்டாரு?

மிஷ்கின் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில், டிரெய்ன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை வி கிரியேஷன்ஸ் மூலம், கலைப்புலி எஸ்.தானு தான் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு, அதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குநர் வெற்றிமாறனும் சிறப்பு விருந்தினராக, அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில், இப்படத்தில், இயக்குநர் வெற்றிமாறன், சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான் நடிகனாக மாட்டேன் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அவர், Train படத்தின் மூலம், தனது சத்தியத்தை மீறியுள்ளார்.

More in சினிமா

To Top