Connect with us

Raj News Tamil

1 லட்சம் கொடுத்து லியோ பட டிக்கெட்டை வாங்கிய அந்த நபர் யார்?

சினிமா

1 லட்சம் கொடுத்து லியோ பட டிக்கெட்டை வாங்கிய அந்த நபர் யார்?

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் லியோ. தென்னிந்திய சினிமாவில் ரிலீஸுக்கு முன்னரே டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த திரைப்படமும் இது தான்.

இந்நிலையில், கோவில்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர், லியோ படத்தின் டிக்கெட்டை விஜய் ரசிகர் மன்றத்திடம் இருந்து சுமார் 1,10,001 ரூபாய் கொடுத்து விஜய் ரசிகர் மன்றத்திடமிருந்து வாங்கி உள்ளார். விஜய்யின் இலவச கல்வி பயிலகத்திற்கு உதவும் என்பதால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், புதுக்கோட்டையில் லியோ படத்தை பார்க்க வந்த விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது காதலியுடன், மோதிரம் மாற்றிக் கொண்டு திருமண நிச்சயம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top