Connect with us

Raj News Tamil

தேவையில்லாத ஆணியை பிடுங்கும் விஜய் – தளபதி68க்கு வந்த சோதனை!

சினிமா

தேவையில்லாத ஆணியை பிடுங்கும் விஜய் – தளபதி68க்கு வந்த சோதனை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு கதாபாத்திரத்திற்கு சினேகாவும் , இன்னொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், விஜய் இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அப்பா,மகன், வில்லன் ஆகிய மூன்று ரோல்களில் விஜய் நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவே, வில்லனாக நடித்த அழகிய திருமகன், விஜய்க்கு தோல்வியை தந்ததால், தளபதி68 திரைப்படத்தின் நிலைமை என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More in சினிமா

To Top