Connect with us

Raj News Tamil

தமிழன் பட பாணியில் அதிரடி காட்டிய விஜய்..!

சினிமா

தமிழன் பட பாணியில் அதிரடி காட்டிய விஜய்..!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.

இதனைத்தொடர்ந்து, காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி ஏழை மாணவ-மாணவிகளுக்காக ‘விஜய் பயிலகம்’ என்ற பெயரில் இலவச பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வழக்கறிஞர் நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் தொடரப்பட்டு, தவறுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top