Connect with us

Raj News Tamil

விஜயின் அரசியல் வருகை! வெற்றிமாறன் இப்படி சொல்லிட்டாரே?

சினிமா

விஜயின் அரசியல் வருகை! வெற்றிமாறன் இப்படி சொல்லிட்டாரே?

சினிமாவில் நடிப்பவர்கள் அரசியலில் நுழைவது காலங்காலமாக, தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என்று, தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய தூண்களாக இருக்கும் அனைவரும், சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான்.

இவ்வாறு இருக்க, நடிகர் விஜயும் அரசியலில் நுழைய இருப்பதாக, இணையத்தில் தகவல் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, விஜயின் அரசியல் வருகை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்திருக்க வேண்டும்.

அதன்பிறகு, அரசியலில் நுழைந்தால் சரியாக இருக்கும்” என்று கூறினார். இவரது இந்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top