Connect with us

Raj News Tamil

இதுவரை வாங்காத சம்பளம் வாங்கிய விக்ரம்! எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

இதுவரை வாங்காத சம்பளம் வாங்கிய விக்ரம்! எத்தனை கோடி தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில், ஸ்டியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது.

பா.ரஞ்சித் மீண்டும் தன்னை நிரூபிப்பாரா? விக்ரமின் இந்த திரைப்படமாவது வெற்றி பெறுமா? என்று பல்வேறு கேள்விகளுடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்காக, நடிகர் விக்ரம் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்திற்காக ரூபாய் 28 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதுதான், விக்ரம் சினிமா வாழ்க்கையிலேயே அதிகமாக வாங்கியுள்ள சம்பளம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால் தான், இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். விஜய், அஜித் காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் நுழைந்திருந்தாலும், பெரிய வெற்றி எதுவும் பதிவு செய்ய முடியாததால், அப்போதிலிருந்தே குறைவான சம்பளமே விக்ரம் பெற்று வந்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top