Connect with us

Raj News Tamil

தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?

சினிமா

தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?

தளபதி விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார்.

இதுதான் விஜயின் கடைசி படம் என்பதாலும், அதன்பிறகு அவர் அரசியலில் இறங்க இருப்பதாலும், தளபதி 69 படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு உள்ளது.

எனவே, இந்த படத்தின் வாய்ப்பை பெறுவதற்கு பல இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் அட்லி தான் இந்த திரைப்படத்தை இயக்க இருப்பதாக, சமூக வலைதளங்களில் சில மணி நேரங்களாக தகவல் பரவி வருகிறது.

இதில், நடிகர் விஜய், முதலமைச்சராக நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என்று பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

More in சினிமா

To Top