Connect with us

Raj News Tamil

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஸ்பெயின்!

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஸ்பெயின்!

2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஸ்பெயின்.

நேற்று நடைபெற்ற போட்டியில் தொடக்கத்தில் இருந்து ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது இதன் விளைவாக 21 நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் எஸ்தர் கோன்சலஸ் முதல் கோல் பதிவு செய்தார்.

அதையடுத்து 23-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் ஐதானா பொன்மதி ஃபினிஷிங் மூலம் அட்டகாசமாக இரண்டாவது கோலை அடித்தார்.

அடுத்த நான்கு நிமிடத்திலேயே எஸ்தர் கோன்சலஸ் அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியிலேயே வெற்றிக்காக மூன்று கோல்களை ஸ்பெயின் அணி எடுத்தது. இந்நிலையில் கோஸ்டாரிகா ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

ஸ்பெயின் ஆதிக்கம் இடைவேளைக்குப் பிறகும் தொடர்ந்தது, இதன் விளைவாக ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது.

More in விளையாட்டு

To Top