Connect with us

Raj News Tamil

ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக மாறிய யோகி பாபு!

சினிமா

ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக மாறிய யோகி பாபு!

லதா மணியரசு இயக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிஸ் மேகி.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷீட்டிங், தற்போது முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடும் விதமாக, அனைவருக்கும் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவும், இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, இப்படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண் வேடத்தில், யோகி பாபு நடித்து வருகிறார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top