Connect with us

Raj News Tamil

இயக்குனர் ஷங்கரை ரிஜெக்ட் செய்த பிரபல ஹீரோ..!

சினிமா

இயக்குனர் ஷங்கரை ரிஜெக்ட் செய்த பிரபல ஹீரோ..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சங்கர். இந்த ஆண்டு இவரின் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் முதலில் யார் நடிக்க வேண்டியது, அவர் ஏன் அந்த படத்தை ரிஜெக்ட் செய்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் முன்னதாக தெலுங்கில் சூப்பர்ஸ்டாரான மகேஷ் பாபு தான் நடிக்க வேண்டியதாம்.

ஆனால் இரண்டு முறை கதை சொல்ல சென்ற இயங்குனர் ஷங்கரை, ஸ்கிரிப்ட் சரி இல்லையென்று சொல்லி மகேஷ் பாபு, அவரை திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க பல ஹீரோக்கள் காத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் மகேஷ் பாபு அவரை ரிஜெக்ட் செய்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top