Connect with us

Raj News Tamil

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு 10 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை..!!

தமிழகம்

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு 10 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை ஒட்டி, சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் 10 கிலோ சாக்லேட் மாலை அணிவித்து கவனம் ஈர்த்துள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பிறந்த நாளையொட்டி கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி வினோத் ஆகியோர் 10 கிலோ எடையில் சாக்லேட் மாலை அணிவித்து கவனம் ஈர்த்தனர்.

அதேபோல் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் மதியம் அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

More in தமிழகம்

To Top