Connect with us

Raj News Tamil

44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து!

தமிழகம்

44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளதாவது:

சென்னை – விழுப்புரம் வழித்தடத்தில் இன்று காலை 11:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, நாளை காலை 11:00, 11:50, 12:30, 1:00, 1:45, 2:15 மணிக்கு ரயில் சேவைகள் இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று காலை 9:40, 10:20, 10:55, 11:30, 12:00, 12:20, 1:00 மணிக்கு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் வழித் தடத்தில் இன்று மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித் தடத்தில் உள்ள பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

More in தமிழகம்

To Top