Connect with us

Raj News Tamil

சென்னையில் போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து

தமிழகம்

சென்னையில் போதிய பயணிகள் இல்லாமல் 6 விமானங்கள் ரத்து

தீபாவளி திருநாளை கொண்டா பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அதேபோல் சென்னை விமான நிலையத்திலும், இன்று பயணிகள் அதிக அளவில் இல்லாமல் மிகவும் குறைந்த அளவே பயணிகள் இருப்பதால், விமான நிலையமும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லக்கூடிய விமானங்களில்
போதிய பயணிகள் இல்லாததால், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து புனே செல்லும் ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நாளை அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய மூன்று புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் டெல்லியில் இருந்து இன்று காலை 8:50 மணிக்கு, சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று இரவு 11 மணிக்கு புனேவிலிருந்து சென்னை வரும் ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நாளை அதிகாலை 2 மணிக்கு, இலங்கையிலிருந்து,சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 3 புறப்பாடு விமானங்கள், 3 வருகை விமானங்கள் மொத்தம் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்களில் பயணம் செய்ய, முன் பதிவு செய்திருந்த மிகக் குறைந்த அளவு பயணிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விமான டிக்கெட்கள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சென்னை விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More in தமிழகம்

To Top