Connect with us

Raj News Tamil

அமித்ஷா வரும் நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் பரபரப்பு..!!

அரசியல்

அமித்ஷா வரும் நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் பரபரப்பு..!!

சென்னை விமானநிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கார் வெளியே வந்து பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அப்போது திடீரென சாலையின் இருபுறங்களிலும் இருந்த மின் விளக்குகள் அணைந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமித்ஷாவின் கார் புறப்பட்டு சென்றதும், மின் தடையை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்த மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி காற்று காரணமாக, மின்தடை ஏற்பட்டது என்றார்.

மின்தடையை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் மின்வாரியம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top