Connect with us

Raj News Tamil

போதை பொருட்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு – நடிகர் கார்த்தி பேச்சு

தமிழகம்

போதை பொருட்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு – நடிகர் கார்த்தி பேச்சு

ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறை சார்பாக சென்னை, மெரினா கடற்கரையில் போதை பொருளை பயன்படுத்துவதை தவிர்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்களின் பார்வைக்காக SAY NO TO DRUG என மணற் சிற்பம் கல்லூரி மாணவர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ராணி மேரி கல்லூரி மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல்களை பாடினர். கல்லூரி மாணவிகள் பாடல்களுக்கு நடமாடினர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி, சென்னை பெருநகர தலைமை கூடுதல் ஆணையர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நடிகர் கார்த்திக், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஈரோடு மகேஷ் மற்றும் கானா பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது : போதை பொருட்கள் ஒரு தைரியமான பெருமையுடன் செல்லக்கூடிய விசயம் கிடையாது . வருங்கால மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மிக முக்கியம் அதை கவனித்தால் மற்றது தானாக குறைந்துவிடும்.

மாலை நேரங்களில் மாணவர்கள் வெளியே சென்று விளையாடுவதற்கு பதிலாக கை பேசியினை கொண்டு வீட்டிற்குள் முடங்கின்றனர். போதை பொருட்கள் நம் சமுதாயத்திற்கு ஒரு பெரிய பின்னடைவை தருகிறது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் நீங்கள் தான் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். பெற்றோர்கள் ஆகிய நீங்கள் தான் தனது பிள்ளைகளை முழு கண்காணிப்பில் வைக்க வேண்டும் என பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் தனது பெயரை பதிவு செய்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top