Connect with us

Raj News Tamil

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவின் அதிக சக்சஸ் ரேட் கொண்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமால் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகர் வித்யூத் ஜமால், ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top