Connect with us

Raj News Tamil

பிரபல நடிகையை திருமணம் செய்த சித்தார்த்! முடிவு பெற்ற லிவிங் உறவு!

சினிமா

பிரபல நடிகையை திருமணம் செய்த சித்தார்த்! முடிவு பெற்ற லிவிங் உறவு!

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்த படத்திற்கு பிறகு, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக களமிறங்கிய இவர், பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில், மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சித்தார்த், சித்தா என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில், இவர் நடிகை அதிதி ராவ் ஹைதரியை திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, அஜய் பூபதி இயக்கிய மகா சமுத்திரம் என்ற படத்தில், நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போது, காதலில் விழுந்த இருவரும், நீண்ட நாட்களாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், இவர்கள் இரண்டு பேரும், தெலங்கானா மாநிலம் வன்னாபர்த்தி மாவட்டத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்துக் கொண்டுள்ளனர். இதுவரை, இருவரும் செய்துக் கொண்டுள்ளதாக, அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top