Connect with us

Raj News Tamil

இரண்டாவது திருமணம் செய்வது உண்மையா? மீனாவே அளித்த விளக்கம்!

சினிமா

இரண்டாவது திருமணம் செய்வது உண்மையா? மீனாவே அளித்த விளக்கம்!

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை மீனா. இவருக்கு வித்யாசாகர் என்ற கணவரும், நைனிகா என்ற மகளும் இருந்த நிலையில், நுரையீரல் தொற்று காரணமாக, வித்யாசாகர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

இதனால், அதிர்ச்சியில் மூழ்கிய மீனா, தற்போது அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இதற்கிடையே, பிரபல நடிகர் ஒருவரை, நடிகை மீனா, 2-வது திருமணம் செய்ய உள்ளதாக, பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த தகவல், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை மீனா, 2-வது திருமணம் குறித்து, தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார்.

“என்னுடைய கணவர் உயிரிழந்ததை என்னால் இப்போது வரை நம்ப முடியவில்லை. அதற்குள், 2-வது திருமணம் குறித்து, எவ்வாறு இப்படி தகவல் பரவி வருகிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இப்போதைக்கு, நல்ல கதைகளை தேர்வு செய்து, சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். அதேபோல், என் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவேன்.. இது தான் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம், மீனாவிற்கு 2-வது திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல், வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top