Connect with us

Raj News Tamil

கேப்டனை கதறி கதறி அழ வைத்த அஜித்!

சினிமா

கேப்டனை கதறி கதறி அழ வைத்த அஜித்!

கேப்டன் விஜயகாந்த், கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதனை அறிந்த ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், திரையுலக பிரபலங்களும், அவர் தொடர்பான நினைவுகளை, பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், புதிய சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, நடிகர் சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று வெளிநாட்டில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, அஜித்தை தவிர, அனைத்து நடிகர்களும், கலந்துக் கொண்டுள்ளனர்.

இதனால், அஜித் மீது கேப்டன் கோபத்தில் இருந்துள்ளார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் சென்னை வந்த பிறகு, கேப்டனை அஜித் சந்தித்துள்ளார். மேலும், தனது பங்கிற்கு பணத்தையும் கொடுத்துள்ளார்.

ஆனால், அதனை கேப்டன் வாங்கவே இல்லையாம். இறுதியில், ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற காரணத்தை அஜித் கூறியுள்ளார். அதாவது, தனது சட்டையை கழட்டி, முதுகில் ஏற்பட்டுள்ள காயங்களை அஜித், கேப்டனுக்கு காண்பித்துள்ளார்.

அந்த காயங்களை பார்த்த பிறகு, கேப்டன் கதறி அழுதுள்ளாராம். அதன்பிறகு, அஜித் கொடுத்த பணத்தை, அவர் மனதார பெற்றுக் கொண்டாராம்.

More in சினிமா

To Top