Connect with us

Raj News Tamil

சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று மாற்றம்!

தமிழகம்

சென்னை புறநகர் ரயில் சேவைகள் இன்று மாற்றம்!

சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஜூலை 30) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.35 மணிக்குச் செல்லும் திருவள்ளூா் மின்சார ரயில் (எண்: 43219), காலை 10 மணிக்குச் செல்லும் திருத்தணி மின்சார ரயில் (எண்: 43507), காலை 10.30 மணிக்குச் செல்லும் கடம்பத்தூா் மின்சார ரயில் (எண்: 43901), காலை 11 மணிக்குச் செல்லும் அரக்கோணம் மின்சார ரயில் (எண்: 43411) இன்று (ஜூலை 30) பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும்.

அதேபோல், காலை 9.05 மணிக்கு வேளச்சேரிலிருந்தும், காலை 9.55 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்தும் திருவள்ளூா் செல்லும் மின்சார ரயில்கள் (எண்: 43763, 43705) இன்று (ஜூலை 30) பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரோடு ஆகிய நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top