சினிமா
நிறுத்தி வைக்கப்பட்ட லியோ படப்பிடிப்பு.. உயிரிழந்த முக்கிய நபர்!
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 2-வது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதனை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வெளியான டைட்டில் டீசரும் அமைந்திருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் படுஜோராக நடந்து வந்தது.
ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதன்காரணமாக, அவர் சென்னை திரும்பியுள்ளதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login