Connect with us

Raj News Tamil

காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு; தலைதெறிக்க ஓடிய தொண்டர்கள்!

இந்தியா

காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு; தலைதெறிக்க ஓடிய தொண்டர்கள்!

காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாவட்டம், ஹைதராபாத்தில் உள்ள அடிலாபாத்தில் நேற்று காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் காங்கிரஸின் அடிலாபாத் மாவட்டத் தலைவர் சஜித் கான் மற்றும் மற்றொரு தலைவர் காந்தி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையிலான கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டார் இதனால் ஹனுமந்த ராவ் அதிர்ச்சியடைத்து கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த மோதலால் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் தலைதெறிக்க ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக காந்தி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More in இந்தியா

To Top