Connect with us

Raj News Tamil

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

அரசியல்

இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டிய திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநதி புகைப்படத்துடன் ‘இன்பநிதி பாசறை’ என்ற வாசகத்துடன் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டது.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போஸ்டர்களை பார்த்த பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மணிமாறன், திருமுருகன் ஆகியோரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

More in அரசியல்

To Top