Connect with us

Raj News Tamil

ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட்…பயணிகள் அதிர்ச்சி

தமிழகம்

ஜெட் வேகத்தில் உயர்ந்த விமான டிக்கெட்…பயணிகள் அதிர்ச்சி

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பயணிகள் கூட்ட நெரிசலின்றி செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் விமான பயணத்தை நாடி உள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்கள் வழக்கமான கட்டணத்தை விட, தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து சேலம் செல்ல வழக்கமான விமான கட்டணம் ரூ.2,390 இருந்தது. ஆனால் இதன் கட்டணம் ரூ.11,504 ஆக இன்றும், நாளையும் அதிகரித்துள்ளது. மேலும் கோவை ரூ.13,709, திருச்சி ரூ.13,086, மதுரை ரூ.13,415, தூத்துக்குடி-ரூ.13,287 ஆக உயர்ந்துள்ளது.

More in தமிழகம்

To Top