Connect with us

Raj News Tamil

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி : மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி : மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேதியா, நூர் அகமது, முகமது ஷமி, மொகித் ஷர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஷிவம் துபே, ரஹானே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in விளையாட்டு

To Top