Connect with us

Raj News Tamil

ஜவான் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?

சினிமா

ஜவான் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அன்று, ஜவான் திரைப்படம் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது.

பொதுவாக திரையரங்குகளில் வெளியான ஒரு மாதங்களுக்கு பிறகே, திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும். ஆனால், இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும், ஜவான் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம், நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top