Connect with us

Raj News Tamil

“காதல் கொண்டேன் பட ஆதியா இது..? இவருக்கு இந்த நிலையா?” – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

சினிமா

“காதல் கொண்டேன் பட ஆதியா இது..? இவருக்கு இந்த நிலையா?” – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

துள்ளுவதோ இளமை படத்தின் வெற்றிக்கு பிறகு, செல்வராகவன் இயக்கியிருந்த திரைப்படம் காதல் கொண்டேன். உறவுகளே இல்லாத ஒருவனுக்கு, ஒரு உறவு கிடைக்கிறது.. அது காலம் முழுவதும் நிலைக்காது என்று தெரிந்த பிறகு, அந்த ஒருவன் செய்யும் விபரீதங்கள் தான் கதை.

தமிழ் சினிமாவையே திருப்பி போட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தன. இந்த படத்தில், சோனியா அகர்வாலின் காதலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சுதீப். ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர், அந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

ஆனால், அதன்பிறகு, இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், பார்ப்பதற்கு டிரைவர் போல் அவர் இருந்தார்.

இந்த புகைப்படத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், இவருக்கு இப்படியொரு நிலையா? என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வந்தனர். ஆனால், அதன்பிறகே, இது வங்கி ஒன்றின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

இருப்பினும், சினிமாவில் நல்லதொரு ஹீரோவாக அல்லது குணச்சித்திர நடிகராக இருந்திருக்க வேண்டிய இவர், இப்படி ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டாரே என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top